‘மக்களின் போராட்டம் அனைத்து இலங்கையர்களையும் ஒன்றுபட வைக்கும்’:பொறுப்புமிக்க ஆட்சிக்காக மதங்கள் அமைப்பு

Date:

தற்போதைய தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் இறுதிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஜனாதிபதி, இடைக்கால நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் வகையில் தனது அரசாங்கத்துடன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதில் நாம் மக்களுடன் உடன்படுகிறோம் என பொறுப்புமிக்க ஆட்சிக்காக மதங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொறுப்புமிக்க ஆட்சிக்காக மதங்கள் அமைப்பு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது,

இதன்போது, வரலாற்றில் இந்த இக்கட்டான நேரத்தில், பொறுப்புமிக்க ஆட்சிக்காக மதங்கள் அமைப்பு
நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார கஷ்டங்கள் மற்றும் துன்பங்களுக்கு முடிவு கட்ட, அரசியல் மாற்றத்தையும் மற்றும் வெளிப்படைத் தன்மையையும் கோரிப் போராடும் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் அதிகரித்துவரும் நமது மக்களுடன் ஒன்றுபட்டு நிற்கின்றது.

மேலும் நமது நாட்டில் காணப்படும் ஊழல் மிக்க மற்றும் திறமையற்ற அரசியல் கலாச்சாரத்தின் உடனடி மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த மாற்றத்தில் அரசியல் யாப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல் செய்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் என்பவையும் அடங்க வேண்டும்.

எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டு செயல் புரிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறது. அவர்கள் மக்களை களைத்துச் சோர்வடையச் செய்து, நாட்டை நெருக்கடிக்கு மேல் நெருக்கடியில் விழ்த்தியிருக்கிறார்கள்.

அவர்கள் தமது பொய்கள், ஆணவம் மற்றும் அதிகார விளையாட்டுகளுக்கு பொறுப்புக்கூற வைக்கப்படுவார்கள். மக்களின் தேவைகள் மற்றும் நலன்களுக்கு சேவை செய்யும், அரசியல் ஆதாயம் தேடாத நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் அடையாளம் காண முடிந்தால், இந்த நெருக்கடியில் இருந்து விடுபட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையையும், அனைவருக்கும், குறிப்பாக நம்மில் மிகவும் பாதிக்கபடக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கும் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்டு வர முடியும்.

குறுகிய இனமத நோக்கங்களைக் கடந்து நிற்கும் இந்த மக்களின் தற்போதைய போராட்டம் அனைத்து இலங்கையர்களையும் ஒன்றுபட வைக்கும் ஆற்றல் உள்ளது என்பதை மதங்கள் அமைப்பு ஏற்றுப் பாராட்டுகின்றது.

இது, அரசியல் கட்சிகளைப் பின்பற்றி செயலற்று இருந்த குடிமக்களை செயல்துடிப்பு மிக்க குடிமக்களாக மாற்றியுள்ளது. இது காலத்தின் தேவை.

பல தசாப்தங்களாக நாட்டின் சாபக்கேடாக இருந்து வரும் பிளவுபடுத்துகின்ற மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாதத்தைத் தோற்றுவிக்கின்ற மனப்பாங்குகளை நாட்டின் குடிமக்களும், அரசியல் கட்சிகளும் மற்றும் மதங்களும் மாற்ற வேண்டும்.

மக்களின் போராட்டங்கள் வன்முறையற்றதாக இருக்க வேண்டும் என்றும் மதங்கள் அமைப்பு வலியுறுத்துகிறது. அனைத்து போராட்டங்களும் அமைதியாக இருக்க வேண்டும்.

மேலும் காவல்துறை மற்றும் ஆயுதப்படையின் உறுப்பினர்கள் நிதானத்துடன் கூடிய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பேணியும், குடிமக்களைப் பாதுகாத்தும், சட்டப்பூர்வமான போராட்டங்களை உறுதி செய்வது அவர்களது கடமையாகும்.

ஒரு தேசம் என்ற வகையில் நாம், பாரிய வேதனைகளையும், மரணங்களையும் மற்றும் அழிவுகளையும் ஏற்படுத்திய மூன்று ஆயுதப் போராட்டங்கள் மற்றும் அடுத்தடுத்து இடம்பெற்ற பல அரசியல் வன்முறைகள் ஏற்படுத்திய கசப்பான நினைவுகளைக் கொண்டுள்ளோம். நமது அன்பிற்குரிய தேசத்தினால் இதற்கு மேலும் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது.

ரம்புக்கணையில் நடந்தது போன்ற நிராயுதபாணியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி சுட்டது, ஒருவரைக் கொன்றது மற்றும் இருபதுக்கும் மேற்பட்டவர்களக் காயப்படுத்தியது போன்ற செயல்களை எப்படி நோக்கினாலும் அவை அடிப்படை நியமங்களுக்கு எதிரானவை. அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய இந்த செயல்களுக்கு நாம் கண்டனம் தெரிவிக்கிறோம்.

அதேவேளை குடிமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து இலங்கையர்களும் சுயபரிசோதனையில் ஈடுபடுவதற்கு இது ஒரு சரியான சந்தர்ப்பமாகும்.

நமது விழுமியங்கள் மற்றும் நடத்தைகளைப் பற்றி சிந்திக்கவும் முன்னொரு போதும் இல்லாத வகையில் இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான பொறுப்பில் நமது பங்கை ஏற்கவும் வேண்டும்.

இறுதியாக, தற்போதைய மக்கள் இயக்கத்தின் வேகமும் மற்றும் சரியான நேரத்தில் ஏற்படுத்தப்படும் அரசியலமைப்பு மாற்றங்களும், அனைத்து சமூகங்களும் சமமாகவும் சுதந்திரமாகவும் வாழும் உண்மையான நீதியான மற்றும் நல்லிணக்கமுள்ள சமூகமாக நமது தேசத்தை மாற்றும் என்று நம்புகிறது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையொப்பமிட்டவர்கள்:

1. கல்கந்தே தம்மானந்த தேரர்
2. ஆயர் துலிப் டி சிக்கேரா
3. வண. பிதா நொயெல் பெர்னாந்து
4. சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி
5. அஷ்ஷெய்க் எஸ். எச். எம். பளீல்
6. அஷ்ஷெய்க் எம். அப்துல்லாஹ்
7. அஷ்ஷெய்க் எம். எம். எம். முனீர்
8. சகோதரி ரசிகா பீரிஸ்
9. சிறப்புநிலைப் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க
10. டாக்டர் தாரா டி மெல்
11. ஹர்ஷ குணசேகர
12. கொண்ட்ரெட் தில்ஷான் பெர்னாந்து
13. கே.வி.கமல்

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...