மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு பெற்றோலை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 45 வயதுடைய பொலிஸ் சாஜன் மற்றும் ஓய்வு பெற்ற 41 வயதுடைய இராணுவ வீரர் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லாவெளி வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 910 லீற்றர் பெற்றோலும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.