மீளுருவாகிய கோட்டா கோ கம!

Date:

காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டம் தொடர்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நேற்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்திருந்தது.
இந்த நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்போம் என்ற தோரணையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடி கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததுடன், ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர்.
இதன் பின்னர் அலரிமாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற மைனா கோ கம போராட்டக்களத்திற்குச் சென்ற முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன் காரணமாக கூடாரங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அங்கிருந்து காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்ற கோட்டா கோ கமவிற்குச் சென்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள் அங்கு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதுடன், அங்கிருந்த கூடாரங்களையும் எரித்தனர். இதன்காரணமாக கோட்டா கோ கம போராட்டக் களம் கலவரபூமியாக மாறியது.
தாக்குதல்கள் எல்லை மீறிய பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கோட்டா கோ கம பகுதியில் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களும் தம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் எதிர்த்தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அத்தோடு, குறிப்பிட்ட சிறிது நேரத்திலேயே கொழும்பு காலிமுகத்திடல் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.
இதனையடுத்து, ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றிருந்தது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த 229 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் அழித்தொழிக்கப்பட்ட கூடாரங்கள் நேற்றையதினமே சிறிது சிறிதாக மீள உருவாக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கோட்டாகம மீளுருவாக்கப்பட்டு ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...