முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாக தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு முன் பெருந்திரளானோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, நாட்டை விற்கும் ரணில், ரணில் வீட்டில் இருங்கள், போன்றை கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.