முழு நாட்டுக்கும் ஒரு முன்மாதிரியாக சேவை செய்யும் ‘yes’ நிறுவனம்!

Date:

ஸஹாரா இஸ்பஹான் என்கின்ற சகோதரி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இல் “பிறர் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறீர்களா?” எனும் தலைப்பில் ஒரு பதிவை இட்டு அதில் அவர், “உங்களின் புதிய மற்றும் ஓரளவு புதிய ஆடைகளை பரிசளியுங்கள்’ பெருநாள் கொண்டாட திண்டாடிக் கொண்டிருக்கும் ஏழை உறவுகளுக்கு உதவி செய்து எங்களால் முடிந்தளவு அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவோம் உதவ விரும்புவோர் அழையுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து பல அழைப்புகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வர ஆரம்பித்துள்ளது. அதன்படி உடனடியாக (Youth Empowerment Society) என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்குகிறார்.

இந்தக் குழுவில் உள்ள அதிகமானோர் 22 வயதுக்கும் 15 வயதுக்கும் உட்பட்ட இளைஞர், யுவதிகள் என்பது விசேட அம்சமாகும்.

இந்தக் குழுவின் இந்த செயற்பாடு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தக் குழுவா இதனை செய்தார்கள் என பலரும் கண்டு பாராட்டினார்கள். அழகான முறையில் திட்டமிட்டு, இந்த செய்ற்பாட்டை இவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.

கிடைத்த ஆடைகளை வைத்து, அதிக தேவையுடைய 70 குடும்பங்களுக்கு வழங்குவது எனத் தீர்மானித்தார்கள். அவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு டோக்கன்களை வழங்கி, ஆடைகளை காட்சிப்படுத்த ஒரு இடத்தை தெரிவு செய்து, அவர்கள் அங்கு வந்து தமது குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு பிடித்தமான மற்றும் அளவான ஆடைகளை தெரிவு செய்து பெற்றுக் கொள்ளும் வகையில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக வெல்லம்பிடிய, பொல்வத்தை பகுதியில் உள்ள இப்படித் தேவையுடைய 21 வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றை பொல்வத்தை பள்ளிவாயலின் செயலாளர் சபீக் வழங்கி வைத்தார்கள்.

மேலும் கடந்த 1ஆம் திகதி தொடக்கம் டோக்கன் பெற்ற 21 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 75 பேர் அளவில் வருகை தந்து தமக்குத் தேவையான ஆடைகளை தெரிவு செய்து, அணிந்து பார்த்து எடுத்துச் சென்றார்கள்.

இதன்பின்னர் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக அடுத்த தரப்பினர் வரவழைக்கப்பட்டனர். 70 குடும்பங்களுக்கு வழங்குவது என திட்டமிட்டிருந்த போதிலும் இறை உதவியால் சுமார் 125 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெற்றார்கள்.

இந்த பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பதிவைப் பார்த்து வரக்காபொலயைச் சேர்ந்த ‘Motivation 2 Win’ என்ற குழுவும் தமது பிரதேசத்தில் இருந்து ஆடைகளை சேகரித்து ‘YES’ குழுவின் இந்த செயற்பாட்டோடு கைகோர்த்தது.

அது தவிர வெள்ளவத்தையிலும், தெஹிவளையிலும், நீர்கொழும்பிலும் ஆடைகளை சேகரித்துத் தர பலரும் உதவினார்கள். ஆடைகளை தந்துதவிய ஏழைகளை மகிழ்ச்சிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குறித்த நிறுவனம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த YES அமைப்பின் செயற்பாடு, அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ஒரு முன்மாதிரியான செயற்பாடாக அமையும் என நம்புகிறோம்.

(YES) குழுவை தொடர்பு கொள்ள:
WhatsApp : +94717188859 (Zahara Isbahan)
Facebook : Youth Empowerment Society

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...