ஹர்த்தால் நிறைவடைந்ததன் பின்னர் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றும் 4000 இற்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
ஹர்த்தால் அமுல்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளுக்காக ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த போதிலும், நேற்று ரயில்கள் இயக்கப்படவில்லை.
அதன்படி இன்றைய தினம் குறித்த புகையிரத சேவை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக தனியார் பேருந்துகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், மாகாணங்களுக்கிடையிலான நீண்ட தூர பஸ் சேவைகள் இன்று சரியான முறையில் இடம்பெறுவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.