அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்

Date:

அத்தியாவசிய அரச உத்தியோகத்தர்களை தவிர வேறு எவரும் பணிக்கு வரவேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் அனைவரும் தேவையில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தீரும் வரை இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற பொதுத்துறை ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலைமையை நிர்வகிக்க இந்த நடவடிக்கை உதவும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...