அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது: இராணுவத் தளபதி

Date:

நாட்டில் நிலவும் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமைதியை நிலைநாட்ட முப்படைகளின் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 86 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மூவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார். கலவரம் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் இராணுவ கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக வன்முறை சம்பங்கள் பதிவாகியிருந்ததுடன் இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தற்போது கொழும்பின் பல பகுதிகளில் இவ்வாறு இராணுவ வாகனங்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...