இலங்கையை மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பலக்லைக்கழகத்தில் PHD பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் கற்கைகள் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் மத ஒப்பிட்டு ஆய்வுகள் தொடர்பான துறையில் கலாநிதி பட்டப்படிப்புக்காக கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்.
மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இப்பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய பீடமான இஸ்லாமிய கற்கைகள் மற்றும் மானுடவியல் பீடத்தின் பதினொரு துறைகள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.
இப்பீடத்தின்
2022 – 2023 காலப் பகுதிக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர், சமய ஆய்வுகள் மற்றும் சமாதான சகவாழ்வு, மற்றும் மதங்களுக்கு இடையேயான புரிதல், குறிப்பாக பௌத்த-முஸ்லிம் புரிதலுக்கான மத ஆய்வுகள் துறையில் தீவிர ஈடுபாடு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றவராவார்.
அதேவேளை பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமயப் புரிதலை ஏற்படுத்த இஸ்லாம் மற்றும் பௌத்தத்தின் ஒப்பீட்டு ஆய்விலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்: இஸ்லாமும் பௌத்தமும் என்ற புத்தகம் இவரால் வெளியிடப்பட்டது.
பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் இதனை பிரசுரம் செய்துள்ளமை விசேட அம்சமாகும்.
ஆசாத் சிராஸ் அவர்களுக்கு NewsNowவின் வாழ்த்துக்கள்!