ஊவா மாகாண ஆளுநரும் முன்னாள் கொழும்பு மேயருமான ஏ.ஜே.எம்.முஸம்மில், பெரோசா முஸம்மிலின் மூத்த மகளான ஷஸ்னா லண்டன் மாநகர சபையின் உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர் கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிட்டு 1167 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
முஸம்மில் கொழும்பு மேயராக இருந்த போது ஷஸ்னா பிரத்தியேக செயலாளராக பணிபுரிந்தார்.
அதன் பின்னர் அவர் இங்கிலாந்து சென்று அங்கு வசித்து வந்தார். கடந்த முறையும் அவர் போட்டியிட்டார் ஆனால் அவர் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இங்கிலாந்திலுள்ள திறந்த பல்கலைக்கழகத்திலுள்ள எம்.பி.ஏ மற்றும் எம்.எஸ்.சி பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஷம்மில் திறந்த பல்கலைக்கழகம் சமுக சேவை அமைப்புக்களில் தொண்டராக பல்வேறு அமைப்புக்களில் உறுப்பினராக இருந்து வயதுவந்தவா்களுக்கு உதவுதல், கெயினாஷ் இளைஞா் அமைப்பு,ஊடாக சிறுவா்கள் சிறையில் உள்ள பெற்றோா்கள் அவா்களது குழந்தைகள் பராமரிப்பு போன்ற சமுக சேவைகளைச் செய்து வருகின்றாா்.
அத்துடன் லண்டனில் கொவிட் 19 தொற்று நோய் சம்பந்தமான சுகாதார சங்கத்தில் இணைந்து வக்சின் வழங்கும் நிறுவனத்தின் தொண்டராகவும் அங்கு பணிபுரிந்து வருகின்றாா்.
அதேவேளை அயலவர்களின் நிலைமையினை மேம்படுத்துவதற்கு சிறிய மற்றும் பாரிய உள்நாட்டு வா்த்தகத்திற்கு உதபுவவா். இலங்கையில் கொழும்பு 7 ல் உள்ள மகளிா் கல்லுாாியில் ஆங்கில மொழி மூலம் கல்விகற்றவா்.
அமெரிக்க அமைப்பான வியாபார அமைப்பொன்றின் துாதுவர் பதவியையும் வகித்துள்ளா். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பாராளுமன்றத் தோ்தல் காலத்தில் இலங்கை வந்து பிரச்சார பணிகளையும் மேற்கெண்டமை குறிப்பிடத்தக்கது.