கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்: மைத்திரி

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது சர்வகட்சி அரசாங்கத்தையோ அமைக்க முன்வந்த போதிலும், அமைக்கப்படும் அரசாங்கத்தில் அவை எதுவும் இல்லை என்றும், முன்னர் ஆட்சியில் இருந்த அதே ஆட்சிதான் என்றும் அவர் கூறினார்.

மேலும், புதிய அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...

வாகன இறக்குமதி மீதான 50% மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கம் விதித்திருந்த 50 சதவீத மேலதிக...

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான...

நாட்டின் பல பகுதிகளுக்கு மழை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...