கொழும்பில் 10 பிரதான மே தின கூட்டங்கள்: பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்!

Date:

பிரதான அரசியல் கட்சிகள் மே தின பேரணிகளை நடத்தவுள்ள நிலையில் இன்று மே 1 ஆம் திகதி கொழும்பு மற்றும் நுகேகொட பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் 10 பிரதான பேரணிகளும் நுகேகொடையில் ஒரு பேரணியும் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மே தின பேரணிகள் நடைபெறும் வீதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வாகன சாரதிகள் மற்றும் வாகன ஓட்டிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, தனது மே தின பேரணியை கண்டியில் இருந்து கொழும்பை சென்றடைந்து பின்னர், கொழும்பு கெம்பல் பார்க்கில் நடத்தவுள்ளது.

ஜே.வி.பி கட்சியின் மே தின பேரணி கொழும்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆர்ப்பாட்டம் நுகேகொட ஆனந்த சமரகோன் திரையரங்கிற்கு அருகில் நடைபெறவுள்ளது.

காலி முகத்திடலுக்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தனது பேரணியை நடத்தவுள்ளது.

இதேவேளை அமெரிக்க தூதரகம் கொழும்பு அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு ஆர்ப்பாட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அமைதிக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் கூட மோதலாக மாறி வன்முறையாக மாறலாம். போராட்டங்களை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்இ இன்று (மே 1) கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் கொழும்பிற்குள்ளான பயணத்தை மிகவும் கடினமாக்குவதுடன், நாள் முழுவதும் வீதி மூடல் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். பின்வரும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி அமெரிக்க தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இலங்கை முழுவதும் கூடுதலான போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன:

லலித் அத்துலத்முதலி மைதானத்தில் (கொழும்பு 06) பிற்பகல் 1:00 மணிக்கு ஆர்ப்பாட்டம். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள்.

விக்டோரியா பூங்காவில் (கொழும்பு 07) காலை 9:30 மணிக்கு சுமார் 5,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்.

ஹைட் பார்க்கில் (கொழும்பு 02) பிற்பகல் 2:00 மணிக்கு ஆர்ப்பாட்டம். 3,000 பங்கேற்பாளர்கள்.

ஸ்டான்லி ஜான்ஸ் மைதானத்தில் (கொழும்பு 02) பிற்பகல் 2.00 மணிக்கு ஆர்ப்பாட்டம். சுமார் 2இ000 பங்கேற்பாளர்கள்.

1,000 பங்கேற்பாளர்களுடன் கொள்ளுப்பிட்டி சந்தி (கொழும்பு 03) நோக்கி பேரணியாக மலையக பெருந்தோட்டத்துறை தொழிற்சங்க அலுவலகத்தில் முடிவுறும்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...