‘அரசியலை ஒதுக்கி விட்டு ஒன்றாக கைகோர்த்து சவாலை வெற்றிகொள்வோம்’: ஜனாதிபதி- பிரதமர் மே தின வாழ்த்து

Date:

நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு மக்கள் இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, சார்பான புரட்சிகர மாற்றத்துடன் போராட்டத்தை நேர்மறையான திசையில் வழிநடத்த ஒன்றிணையுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

உலக உழைக்கும் சமூகம் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் வருகிறதென தெரிவித்த ஜனாதிபதி, கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொண்ட குழு தொழிலாளி வர்க்கம்தான் என தெரிவித்துள்ளார்.

இந்தச் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு ஸ்திரத்தன்மையுடன் இருந்து தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்தவர்களும் அவர்களே.

எனினும் நாளுக்கு நாள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்று இன்னும் தீவிரமானவை என்றும் இந்நிலையிலிருந்து மக்களை விடுவிப்பதற்கும், ஒடுக்குமுறையை போக்குவதற்கும் அரசாங்கம் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி இழப்பு பல சிக்கல்களை உருவாக்கியுள்ளதாகவும் இந்த எல்லா காரணிகளையும் நிர்வகிப்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பிரச்சினைக்கு யார் பொறுப்பு என்பதைத் தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துவதும், அதைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் பொருத்தமான மற்றும் திறமையான வேலைத்திட்டத்திற்குச் செல்வதும்தான் நாம் இப்போது செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு. இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்று, அரச தலைவர் என்ற வகையிலும், மக்கள் சார்பிலும் தான் அனைத்து அரசியல் சபைகளின் தலைவர்களையும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நொடியும், மக்களின் துன்பத்தைப் போக்கக்கூடிய வழிமுறைகளைக் கையாண்டு தற்போதுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதே தங்களின் இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது மேதின வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் போராட்டத்திற்காக உங்களுடன் கைகோர்த்திருந்த நான் பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பங்களிலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகரளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தெற்காசியாவின் 2ஆவது அமைதியான நாடாக இலங்கை தேர்வு!

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்க்கமான நாள்: அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு!

இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி: 7 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல்...

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு...