ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு போராட்டம்!

Date:

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த போராட்டம் கொழும்பு கோட்டை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டிடத்திற்கு வெளியே இடம்பெறுகின்றது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.

அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...