கரு ஜயசூரிய அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெரும்பான்மை வாக்குகளால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க வேண்டுமானால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கி மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்று அறிவிக்கப்பட்டு, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும்.
அதன் பின்னர் இது தொடர்பான கருத்துக்கள் அடங்கிய பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை அடுத்த வாரத்திற்குள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.