புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை அவர் பதவியேற்றுள்ளார்.

சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்த போதும், அதனை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர், இறுதி நேரத்திலேயே சஜித் பிரேமதாச கடிதம் அனுப்பியிருந்தார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை தாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஓமல்பே சோபித தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் 30,000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று தனது ஆசனத்தை இழந்தார். தனது கட்சி வெற்றி பெற்ற ஒரே ஆசனத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் நுழைந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், தற்போது அவர் 6வது முறையாக இலங்கையின் பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...