மல்வானையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: தன் உயிரை பணயம் வைத்து பிறர் உயிர் காத்த இளைஞர்கள்!

Date:

மல்வானை கலாப பிரதேசத்தில் ஒரு விபத்து இடம்பெற்றது. இந்த துக்ககரமான விபத்து சம்பவம் தொடர்பாக பல ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டதுடன் குறித்த சம்பவம் மல்வானை வரலாற்றில் சோகமான தினமாக பதியப்பட்டது.

அண்மையில், மல்வானை கலாப பிரதேசத்தில் வீட்டிற்கு முன் கழிவு நீர் செல்லும் 15 அடி அளவிலான ஒரு குழியில் விழுந்து 2 நபர்கள் உயிரிழந்ததுடன் 3 பேர் காப்பாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

மல்வானை கலாப பகுதியைச் சேர்ந்த ஹசன் ஹாஜியார் என்பவர் வீட்டின் முன்னால் , கழிவு நீர் அனுப்புவதற்காக 15 அடி அளவிலான ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது.

இந்தக் குழி சமீபத்தில் தோண்டப்பட்டு அதற்காக மேற்பகுதியால் கொங்ரீட் போடப்பட்டது. இதுவரை பாவிக்கப்படாத இந்த புதிய குழியானது, உட்புறத்தால் சடலிங் (sataling) இதுவரை அகற்றப்படாத நிலைமையில் இருந்தது.

இந்நிலையில், ஹசன் ஹாஜியார் பாஸ் ஒருவரை அழைத்து குறித்த குழியில் இருந்த சடலிங் பார் இனை அகற்றப்படாதகேட்டுள்ளார்.

குறித்த குழி, கொங்ரீட் போடப்பட்டு பாவிக்கப்படாத நிலையில் இருந்த புதிய குழி என்பதால் அதன் உட்புறம் ஒக்ஸிஜன் அளவு குறைந்து இருந்தது.

குழியில் இறங்கி கம்பியினை கழட்டுவதற்காக இறங்கிய அவர், உள்ளே சென்ற போது மூச்சுத் தின்றி விழுந்திருக்கிறார். இவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக மூவர் குறிக்குள் விழுந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த, தீயணைக்கும் படையினரே பின் வாங்கிய பொழுது, இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் செய்த செயல் மெய் சிலிர்க்க வைத்தது.

குறித்த விபத்து இடம்பெற்ற போது, குடும்பத்தினர் செய்வத்றியாது தவித்து உடனடியாக தீயணைப்பு படையினரை உதவிக்கு அழைத்தனர்.

அதே சந்தர்பத்தில் மல்வானை அவசர உதவி என்ற வாட்ஸ் அப் குழுமத்தில் உடனடி உதவி கேட்டு ஒரு நபர் தகவல் பகிர்ந்தார்.

அந்த பதிவினை பார்த்து மல்வானை மக்கள் சம்பவ இடத்துக்கு உதவிக்கு விரைந்தனர். அதில் மலவானை யட்டிஹேன பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இந்த பிரச்சினைகள் தொடர்பாக முன் அனுபவம் கொண்டவர்.

அவர் ஒக்ஸிஜன் உதவியோடு உள்ளே இறங்கி முதலாவதாக ஹசன் ஹாஜியர் அவர்களை மீட்டெடுத்தார்.

தொடர்ந்து உள்ளே மற்றவர்களை மீட்பது ஒருவரால் கடினம் என்றும் ஒரு நபரால் மீண்டும் மீண்டும் உள்ளே இறங்கி செல்வது ஆபத்தானது. எனினும் தன்னால் முடிந்த உதவிய அந்த நபர் செய்தார்.

இதனை அவதானித்துக் கொண்டிருந்த மொஹமட் அஹார் இது தொடர்பாக எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத போதும், முதல் நபர் சென்று வந்ததை அவதானித்த அறிவுடன் குழிக்குள் இறங்கினார்.

தன் உடல் பலத்தையும் மன தைரியத்தையும் கொண்டு, மீண்டும் மீண்டும் சென்று ஒருவர் ஒருவராக உள்ளே இருந்த 4 பேரை மீட்டெடுத்தார். முதலாவதாக மீட்கப்பட்ட ஹசன் ஹாஜியர் உயிரிழந்தார்.

மொஹமட் அஹர் மீட்ட 4 பேரில் மூவர் உயிர் தப்பினர். முதலாவதாக இறங்கிய யட்டிஹேன பகுதியைச் சேர்ந்த இளைஞர் அனுபவத்தில் தைரியமாக முன்வந்தார். அவர் காட்டிய அனுபவத்தில் தன் தைரியத்தில் அஹர் குழிக்குள் இறங்கினார்.

இந்த இரண்டு நபர்களும் ஒரு நொடி கூட தமது உயிரைப் பற்றி சிந்திக்காதவர்கள். உயிரிழந்த ஹசன் ஹாஜியார் கூட , உள்ளே செல்வது ஆபத்து என அறிந்தும், தன்னிடம் நம்பி வேலைக்காக வந்தவர்களை எப்படியாவது காக்க வேண்டும் என்று போராடியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...