‘ராஜபக்ஸக்களின் பாதுகாப்பிற்காக ரணில்அதிகாரத்தைப் பெறுகிறார்’: அனுரகுமார

Date:

ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ராஜபக்ச குடும்பத்தின் மீட்பராக இருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ரணில் கோட்டாபயவை நம்புவதாகவும் கோட்டாபய ரணிலை நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து உருவாக்கும் சதியை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து முன்மொழிந்த ஒன்றை நாட்டில் யார் நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ரணில் கோட்டா ஆகியோரின் சதிக்கு இந்த நாட்டில் உள்ள எந்தவொரு பிரஜையும் இம்முறை வீழ்ந்துவிடமாட்டார்’ என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க இதன்போது, சுட்டிக்காட்டினார்.

சூழ்ச்சிக்காரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தீர்மானங்களே எட்டப்பட்டுள்ளதாகவும் மாளிகைகளில் நடைபெறும் சதிகளின் மூலமாக மக்களின் உண்மையான எதிர்பார்ப்பும் அபிப்பிராயங்களும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...