வன்முறை சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு மக்களிடம் சி.ஐ.டி வேண்டுகோள்!

Date:

அண்மையில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான, காயமடைந்த மற்றும் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய 0112 422176, 0112 320145, 0718592087, 0718594942, 0718594901 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.

அதேபோல வன்முறைக் குழுக்களின் குற்றச் செயல்கள் மற்றும் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் அத்தகைய தகவல்களை வழங்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அவசர தொலைபேசி எண் – 0767 392 977 மற்றும் 0112 441 146, பொது பாதுகாப்பு அமைச்சகம் – 118.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...