அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல்!

Date:

பத்தரமுல்ல பெலவத்தையில் கல்வி அமைச்சுக்கு எதிரே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது மாணவர்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

இவ்வேளையில் அங்கிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் மாணவர்கள் நோக்கி கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...