அமைச்சர் நிமல் சிறிபாலவை பதவியில் இருந்து நீக்க இடைக்கால தடை உத்தரவு!

Date:

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

இதனை எதிர்த்து இன்று முற்பகல் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக இந்த தீர்மானத்திற்கு தடை கோரி மனுவொன்றை தாக்கல் செய்தார்.

சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு தலைவருக்கோ,  பொதுச் செயலாளருக்கோ, மத்திய குழுவுக்கோ அதிகாரம் இல்லை என நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...