இன்று முதல் யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட அதிவேக ரயில் சேவை!

Date:

ஜூன் 15ஆம் திகதி முதல் விசேட பயணிகள் போக்குவரத்துத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் பின்னர், இன்று கல்கிசையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான நகரங்களுக்கு இடையிலான சொகுசு விரைவு ரயில் சேவையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வை அடுத்து அண்மைக்காலமாக போக்குவரத்து செலவுகள் மற்றும் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இன்று முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கல்கிசையில் இருந்து யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

கல்கிசையில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

இதே ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை (20) அதிகாலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

ரயில்வே துறையின் தகவலின்படி, இந்த ரயிலில் 10 முதல் வகுப்பு பெட்டிகள் உட்பட குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் 520 இருக்கைகள் உள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...