எந்தக் காலத்திலும் கண்டிராத செழிப்புடன் பங்களாதேஷ் நாடும், நாட்டு மக்களும்!

Date:

பங்களாதேஷ் வரலாற்றில் இந்தளவு செழிப்புடன் நாடும், நாட்டு மக்களும் இருந்ததில்லை. முழுப்பெருமையும் ஷேக் ஹசீனாவின் தலைமைக்கு என்றால் மிகையாகாது.

அண்டைநாடுகளான பாகிஸ்தானும், இலங்கையும் சீனாவை நம்பி மோசம் போக, பங்களாதேஷ் ஜப்பானுடன் கூட்டணி அமைத்து உலகில் 37 ஆவது பெரிய பொருளாதார நாடாக வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பங்களாதேஷ் 80% வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த மக்களை 12% க்கும் குறைவாக ஏற்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பான் பங்களாதேஷில் சுமார் $24 பில்லியன் முதலீடு செய்து 5100 கி.மீ. நீளத்துக்கு வீதிகள் அமைத்து அந்த நாட்டின் போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தையே கொண்டுவந்தது. இரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும் நிதி உதவி செய்துள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த மக்களை மைக்ரோபைனான்ஸ் மூலம் உயர்த்தினார் முகம்மது யூனுஸ். மைக்ரோபைனான்ஸ் என்றால் சிறுகடன் உதவித் திட்டம், நுண்கடன் உதவித் திட்டம் எனலாம். நுண்கடன் என்றால் சந்தை மற்றும் வர்த்தக அணுகுமுறைக்கு உதவும் வகையில், ஏழைகளுக்கு வழங்கும் பலவித பொருளாதார சேவையை குறிக்கும். இது சேமிப்பு, ஆயுள்காப்பீடு, பணபரிமாற்றம் மற்றும் கடன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஏழைகளுக்கு கடன் மூலம் உதவியதன் காரணமாக முகம்மது யூனூஸ் அவர்களுக்கு 2006 இல் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

மேலும் முகம்மது யூனுஸ் ஏழைகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு மைக்ரோபைனான்ஸ் மூலம் உதவினார். ஆண்கள் கடன் எடுத்து வீண்விரயம் செய்வார்கள் என்பதனால்தான் பெண்களுக்கு கடன் கொடுத்தார். பெண்களுக்கு கடன் கொடுத்தால் பொறுப்பாக இருப்பார்கள் என நம்பினார். நம்பிக்கை வீண் போகவில்லை. இதன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தினார்.

பங்களாதேஷின் வறுமை ஒழிப்பில் முக்கிய பங்கு முகம்மது யூனுஸ் அவர்களுக்குத்தான் என்றால் மிகையாகாது. பங்களாதேஷின் எழுச்சி முழுக்க அதன் பின்னலாடை தொழில் எனலாம்.

பங்களாதேஷின் ஏற்றுமதியில் 82% பின்னலாடை மூலமே வருகிறது. பங்களாதேஷ் சாதனை படைத்த ஊராக மாறியது எனலாம்.

லூயிவிட்டான் உள்ளிட்ட பல பிராண்டுகள் பங்களாதேஷில் உற்பத்தி செய்கின்றன. உலகில் சீனாவுக்கு அடுத்து ஆடை உற்பத்தி ஏற்றுமதியில் பங்களாதேஷ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பங்களாதேஷின் அடுத்த வருமானமாக தொழிலாளிகள். மாலைதீவு, வளைகுடா நாடுகளில் ஏராளமான பங்களாதேஷ் தொழிலாளிகள் பணியாற்றுகிறார்கள். ஆண்டுக்கு $28 பில்லியன் அந்திய செலாவணியாக வருகிறது.

ஆடை உற்பத்தியில் பங்களாதேஷிற்கு கடும்போட்டியாகவிருந்த வியட்நாமை 2021 இல் பின்தள்ளி இரண்டாமிடத்தை பிடித்தது.

தற்போதுள்ள பொருளாதார முன்னேற்றத்தை பயன்படுத்தி கல்வியில் முதலீடு செய்து மிகப்பெரிய படித்த இளைஞர் சமூகத்தை உருவாக்க திடட்மிட்டுள்ளார் ஷேக் ஹசீனா.

கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...