மே 9 வன்முறைச் சம்பவம்: மஹிந்த கஹந்தகம கைது!

Date:

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக இவரும் ஏனைய குழுவினரும் பெயரிடப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

சந்தேகநபர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஆகியோர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மஹிந்த கஹந்தகம ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநாகர சபை உறுப்பினரான சுயதொழிலாளர் சங்க சம்மேளனத்தின் தலைவராக செயற்படுபவராவார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...