எரிபொருள் சிக்கலால் வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைகளை நடத்த தீர்மானம்!

Date:

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு முறையே மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளது.

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, செயற்படுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...