எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்: கெமுனு விஜேரத்ன

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவைகள் நாளை முதல் 50 வீதத்தினால் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பஸ் சேவை சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பொது போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருள் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

இதேவேளை ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொதுப் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, அன்றாட நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து ஊடகங்கள் மற்றும் அலுவலக ரயில் மற்றும் பேருந்து சேவைகள், பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் (ஆம்புலன்ஸ்கள் போன்றவை) சில நாட்களுக்குள் மேம்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...