கடனை செலுத்தத் தவறியதால் அமெரிக்க வங்கி இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Date:

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்க வங்கியொன்று கடனை செலுத்தத் தவறியமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக ‘புளூம்பேர்க்’கை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ‘ஹெமில்டன் ரிசர்வ்’ வங்கியினால் இலங்கைக்கு எதிரான வழக்கு நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் 5.875 சதவீதத்தில் 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை ஹாமில்டன் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது.

இதேவேளை இலங்கை அசல் மற்றும் வட்டியை முழுமையாக செலுத்த வேண்டும் என்று ஹாமில்டன் ரிசர்வ் வங்கி வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில், (White & Case LLC) சட்ட ஆலோசகர்கள் ஒரு அறிக்கையில், 30 க்கும் மேற்பட்ட இலங்கை சர்வதேச பத்திரப்பதிவுதாரர்கள் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை தொடங்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

கடனாளிகள் குழு இலங்கை அதிகாரிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், நாடு ‘அர்த்தமுள்ள சீர்திருத்தம் மற்றும் நிதி சரிசெய்தலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, இலங்கை தனது முதல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..

Popular

More like this
Related

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...