சரும நோய்கள் தொடர்பான இலவச ஒரு நாள் வைத்திய முகாமொன்று கஹட்டோவிட்டவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா சுகாதார மருத்துவ காரியாலயம், மற்றும் கொழும்பு (ALLIANCE development Trust) என்பன இணைந்து கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ. மற்றும் இமாம் ஷாபி நிலையம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய சரும நோய்கள் தொடர்பான இலவச ஒரு நாள் வைத்திய முகாம் எதிர்வரும் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, காலை 9:00 மணி முதல், கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிலைய வளாகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிகிச்சை முகாமில் கலந்து பயன்பெற விரும்புவோர், 0727 4222 42 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு தங்களுடைய பெயர் மற்றும் முகவரியினை வழங்கி பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
(கஹட்டோவிட்ட நிருபர்)