சம்மாந்துறையில் குழந்தை ஒன்றைக் கடத்த முற்பட்ட சம்பவம்!

Date:

குழந்தை ஒன்றைக்கடத்த முற்பட்ட வயோதிபர் ஒருவர் சம்மாந்துறையில் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது.

4 வயதையுடைய ஆண் குழந்தையொன்று சம்மாந்துறை ஹிஜ்ரா 5ஆம் வீதியில் இயங்கும் பாலர் பாடசாலையிலிருந்து நண்பகல் ஒரு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவ்வீதியில் நின்றிருந்த 55 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் இக்குழந்தையை வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்டுள்ளார். இதன்போது அக்குழந்தை கூக்குரலிட்டு அழுதுள்ளது.

இதனை அவதானித்த அவ்வீதியில் நின்றிருந்த பொது மக்கள் அக்குழந்தையை அவ்வயோதிபரிடமிருந்து காப்பாற்றியதோடு அவ்வயோதிபரை நையப்புடைத்து சம்மாந்துறைப்பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை மருந்துகள், சிறிஞ், ஊசி மற்றும் பாடசாலை மாணவர்களில் உடைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...