தமது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு, ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்த தீர்மானம்: கல்வி அமைச்சு

Date:

ஆசிரியர்கள் தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் சேவைகளில் ஈடுபட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு அதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவை அமர்த்தும் போது, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு, தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலை, சாதாரண பாடசாலை என்ற வேறுபாடின்றி ஆசிரியர்களை இவ்வாறு சேவையில் அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலையொன்றில் மேலதிக ஆசிரியர்கள் இருப்பார்களாயின், மேலதிகமாக உள்ள ஆசிரியருக்கு மற்றுமொரு ஆசிரியரை ஈடுபடுத்த முடியாது, அவரை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பாடசாலையில் கடமை அமர்த்த முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...