தலிபான்கள் மற்றும் இந்தியா தூதுக்குழுவினா் சந்திப்பு: இது குறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான்!

Date:

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி. சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணமானது.

இது குறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடா்பாளா் அசிம் இப்திகார் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கடந்த நவம்பா் மாதம் அனுமதி அளித்தது. “அமைதியான, நிலையான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானைத்தான் நாங்கள் விரும்புகிறோம்”.

நிலையான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானில் எந்தவொரு நாடும் பாதிப்பை ஏற்படுத்துவதை விரும்பவில்லை என அவா் தொிவித்தாா்.

குறித்த சந்திப்பில் இந்தியக் குழுவினா் தலிபானின் மூத்த தலைவா்களை சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...