காத்தான்குடியில் கைக்குண்டு கண்டெடுப்பு!

Date:

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றின் பின்பக்கத்தில் குழியொன்றை தோண்டும் போது அதில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த உணவகத்தின் பின்பகுதியில் கழிவு நீரை வௌியேற்றுவதற்காக குழியொன்றை தோண்டி தாங்கி ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த கைக்குண்டு இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கைகுண்டை மீட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...