பாகிஸ்தானின் கந்தார பௌத்த பாரம்பரியமும் அதற்கான சான்றுகளும்!

Date:

-பேராசியர் எம் அஷ்ரஃப் கான்
ஆசிய நாகரிகங்களுக்கான தக்ஷிலா நிறுவனம்
இஸ்லாமாபாத் குவெய்தி அல் அஸாம் பல்கலைக்கழகத்தின்

பண்டைய காலம் முதல் தெற்காசியாவின் முக்கியமான பகுதியாக பாகிஸ்தான் என தற்போது அழைக்கப்படும் பகுதி இருந்து வருகிறது.

பல நூற்றாண்டுகளாக பௌத்த மதத்தின் முக்கியப் பிரதேசமாக இப்பகுதி இருப்பதால் இது ‘புத்த மதத்தின் புனித பூமி’ என்றும் அழைக்கப்படுகிறது.

கந்தாரா என்று அழைக்கப்படும் பகுதி கைபர் பக்துன்க்வா, தக்ஷிலா பள்ளத்தாக்கு (வடக்கு பஞ்சாப்), கீழ் சிந்து பள்ளத்தாக்கு மற்றும் காஷ்மீர் முழுவதும் பரந்து விரிந்துள்ளது.

மறுபுறம், கந்தாரா 100 கி.மீ கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் 70 கிமீ வடக்கு மற்றும் தெற்கில் அமைந்துள்ள ஒரு முக்கோண வடிவம பிரதேசமாகும்.

இருப்பினும், கந்தார தேசத்தின் பல்வேறு கலைகள் புவியியல் தடைகளைத் தாண்டி கிழக்கு ஆப்கானிஸ்தான், உத்தியானா, பல்க், ஸ்வாட் பள்ளத்தாக்கு, டிர், புனர், பஜாவர் மற்றும் பெஷாவர் பள்ளத்தாக்குகள் வரை பரவியது (கான் மற்றும் லோன் 2004: 7)

பல்வேறு அரச வம்சங்கள் கடந்த காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்தன. மேலும் இவ்வம்சங்கள் இப்பகுதியின் சமூக-அரசியல், பொருளாதார, மத மற்றும் கலை வடிவங்களுக்கு பாரிய பங்களிப்பும் செய்தன.

அவர்கள் தங்கள் சொந்த கலாச்சார கூறுகளை கந்தார கலை மற்றும் கட்டிடக்கலையில் இணைத்து அதன் அழகை மெருகேற்றினர். புத்த பிரானின் வாழ்க்கை வரலாறு கந்தார கலை மற்றும் கட்டிடக்கலையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கந்தாரத்தில் புத்தபெருமானை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட முதல் நினைவுச்சின்னம் ஸ்தூபியாகும். மிகக் குறுகிய காலத்தில், கந்தாரத்தில் பௌத்த மதம் பரவியது.

குறிப்பாக மௌரிய பேரரசனான அசோகர் பௌத்தத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். அசோக மன்னர் முதல் ஒன்பது ஸ்தூபிகளைத் அமைத்து புத்த மதமத்தை ஏற்ற இருந்த முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.

கந்தாரப் பகுதியில் உள்ள முதல் பௌத்த நினைவுச் சின்னங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தக்ஷிலாவில் உள்ள தர்மராஜிகா மற்றும் புட்காராவில் நிர்மாணிக்கப்பட்டது.

மேலும், பல ஸ்தூபிகள் பௌத்த கலாச்சார சின்னங்கள் மற்றும் பிரநாட்டு கலாச்சார தாக்கங்களுடனேயே கட்டப்பட்டது (பலுக்சானிஸ்ட்ஸ் 2008: 73). இங்கு காணபபட்ட பௌத்த பாரம்பரியத்தில், ஸ்தூபிகள் மற்றும் கலைப்பொருட்கள் கொண்ட பௌத்த பாரம்பரியம் மிக தனித்துவமுள்ளவையாகும்.

இதை தற்போதைய பாகிஸ்தான் முழுவதும் காணலாம். உலகின் இரண்டு முக்கிய நாகரிகங்களான இந்தோ மற்றும் கந்தார நாகரிகத்தின் தாயகமாக பாகிஸ்தான் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கந்தாரா என்பது கிமு 326 இல் அலெக்சாண்டர் மன்னன் ஆக்கிரமித்த ஒரு பழங்காலப் பகுதியாகும் (ஹார்லி 1994: 22).

மறுபுறம், பண்டைய இந்திய காவியமான இராமாயணத்தின் படி, கந்தாரம் ராமரின் சகோதரர் பரதன் கைப்பற்றிய ஒரு பகுதியாகும். இராமர் முதலில் தனது இரண்டு மகன்களுக்காக (கலாவதி என்றும் அழைக்கப்படும்) புகாரட் மற்றும் தகைல் அல்லது தக்ஷிலா என்ற இரண்டு முக்கிய பகுதிகளை உருவாக்கினார்.

கந்தார சாம்ராஜ்யம் கிமு 1 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.

1 முதல் 5 ஆம் நூற்றாண்டு வரையிலான குஷான் காலம் அதன் வளர்ச்சியின் பொற்காலமாக இருந்தது. காந்தாரம் என்றால் ‘சுகந்தமிக்க மண்’ என்பது பொருளாகும்.

கந்தார கலையை ‘பிரதிநிதித்துவ நிலை’ மற்றும் ‘குறியீட்டு நிலை’ என இரண்டு நிலைகளாக பிரிக்கலாம். காந்தார பிராந்தியத்தின் பல முக்கிய அரசர்களால் ஆளப்பட்டதுடன் பௌத்த மதத்தின் மீதான அபிமானம் அவ்வனைத்து அரசரிகளிடம் காணப்பட்டது.

நாந்தார தேசத்தின் ஏனைய பொதுவான அம்சம் இந்தோ-கிரேக்க கலை பாரம்பரியத்தை காந்தாரம் தழுவியமை ஆகும் (ஸ்வால்:ப் 1996: 14).

கந்தாரத்தில் பௌத்த மதத்தின் பரவல்

பௌத்தம் 3 ஆம் நூற்றாண்டில் கந்தாரத்தில் பிரவேசித்து பல தசாப்தங்களாக இந்திய துணைக்கண்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.

மத்திய ஆசியா மற்றும் சீனாவிற்கு புத்த மதம் பரவுவதற்கான நுழைவாயில் என்றும் காந்தாரத்தைப் வர்ணிக்கலாம் (பியா மற்றும் கூர்ட் 2006: 04).

இந்தப் புதிய சித்தாந்தம் இப்பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்ததுடன் அதற்கு சென்ற இடமெல்லாம் ஆடசியாளர்களின் ஆதரவும் கிடைத்தது.

கந்தாரத்தில் பௌத்தத்தின் ஆரம்பகால சான்றுகள் அசோக மன்னரால் வரையப்பட்ட ‘அசோக ஆணைகளில்’ காணப்படுகின்றன. கந்தாரத்தில் பௌத்தம் இருந்ததற்கான சான்றாக அசோக ஆணைக்ளை எழுத காந்தார மொழியைப் பயன்படுத்துதியமையை குறிப்பிடலாம்.

அசோக மன்னனால் கட்டப்பட்ட ஆறு தூபிகள் காந்தாரத்தில் இருந்ததாக ஹெகியசாவான் சேங் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் தக்ஷிலாவில் உள்ள தர்மராஜிகா ஸ்தூபிதான் இவற்றில் மிகப்பெரிய ஸ்தூபியாகும்.

காந்தார மன்னர் முதலாம் மெனந்தர் புத்த மதத்தைப் பின்பற்றியவரே. அவர் தனது ஆட்சியின் போது இந்த தத்துவத்தை சிறந்த முறையில் மேம்படுத்தினார். காந்தார பௌத்தத்தின் கலையில் கிரேக்கத்தின் தாக்கம் காரணமாக, புத்தரின் உருவம் முதலில் சிலை வடிவத்தில் உருவாக்கப்பட்டதை அவதானிக்கலாம்

குஷான்அரசனும் புத்த மதத்தை விரும்பினான். எனவே பௌத்த மடங்கள் மற்றும் ஸ்தூபிகளின் கட்டுமானத்தை அம்மன்னன் ஊக்குவித்தான். கிபி 2 ஆம் நூற்றாண்டின் இறுதியில், காந்தாரத்தில் பல புத்த மையங்கள் இருந்தன.

குஷான் பேரரசின் தலைநகரம் (இன்றைய பெஷாவர்) பல புத்த ஸ்தூபிகள் மற்றும் மடாலயங்களைக் கொண்டிருந்தது. புத்தபெருமானின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிற்பங்களும் இங்கு உள்ளன.

3 ஆம் நூற்றாண்டில் புத்த தலங்களுக்கான ஆதரவு மேலும் சிறிதளவு அதிகரித்தது. இக் காலகட்டத்தின் முக்கிய பௌத்த வரலாற்று தளங்களில் தக்ஷிலா, தக்தி-இ-பாஹி, ஜஹ்ரி பஹ்லோல், ஜமால் கர்ஹி, ராணிகாட் மற்றும் தாரை ஆகியவை அடங்கும்.

குஷான் மன்னன் புத்த மதத்தை ஆதரித்ததால், அது பட்டுப்பாதையில் பக்திரியா, மத்திய ஆசியா மற்றும் சீனாவுக்கு வேகமாக பரவியது.

மேலும் இது காந்தாரத்திலிருந்து ஆசியாவிற்கு ஒரு வணிகப் பாதையை நிறுவவும் உதவியது. குஷான் யுகத்தின் முக்கிய ஸ்தூபிகள் பாகிஸ்தானில் உள்ள புட்காரா ஸ்தூபி மற்றும் பாரிகோட் ஸ்தூபம் ஆகும். 5 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில்.

காந்தாரத்தில் வெள்ளை ஹன்களின் ஆக்கிரமிப்புடன் குஷானின் வீழ்ச்சி ஆரம்பமாகியது. இருப்பினும் 6 ஆம் நூற்றாண்டில் வெள்ளை ஹன்ஸின் வீழ்ச்சியின் பின்பும் பௌத்த தலங்களின் வீழ்ச்சி தொடர்ந்ததை அவதானிக்கலாம். இருப்பினும், காந்தார எல்லைப் பகுதிகளில் பௌத்தம் தொடர்ந்து வளர்ந்து வந்தது.

சீனத் துறவியான ஷுவான் nஷங் தனது விஜயத்தின் போது, காந்தாராவில் கைவிடப்பட்ட பல பௌத்த மையங்களுக்குச் சென்றார். பௌத்த நடவடிக்கைகளின் முக்கிய நகரங்களில் ஒன்று பாமியான் பிரதேசமாகும் (தற்கால ஆப்கானிஸ்தான்).

அங்கிருந்த புத்தர் சிலைகளின் இடிபாடுகளை ‘பாமியன் புத்தர்கள்’ என்று அழைக்கப்படும். இச்சிற்பங்களின் வரலாறு கி.பி. இது 3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை பின்னால் செல்லுகின்றன. மேலும் 7 ஆம் நூற்றாண்டின் புத்த தளங்கள் என்றும் போற்றப்பட்டு வருகின்றன.

பௌத்தத்துடன் தொடர்புடைய ஏனைய முக்கியமான காந்தார தளமான கில்கிட் பட்டுப்பாதையில் அமைண பெற்றுள்ளது (ரெஹ்மான் 1996: 75).

பாகிஸ்தானில் காணப்படும் பௌத்த தூபிகள் மற்றம் துறவி மடங்கள்

பௌத்த தலங்கள், ஸ்தூபிகள், மடங்கள், கோவில்கள், குடியிருப்புகள், குகைகள், கற் சிற்பங்கள் மற்றும் ஏராளமான கல்வெட்டுகள் பாகிஸ்தான் முழுவதும் சிதறிக்கிடப்பதைக் காணலாம்.

மிகவும் பிரபலமான சீன ஆய்வாளர்களில் ஒருவரான ஹிசுவான்-சாங் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் ஸ்வாட் பள்ளத்தாக்கை வர்ணித்ததுடன் பௌத்த சகாப்தத்தின் நீடிப்பை உறுதிப்படுத்திய 1400 ஸ்வாட் மடாலயங்களைப் பற்றி தனது பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டார்.

இன்றும் ஸ்வாட்டில் 400 க்கும் மேற்பட்ட புத்த ஸ்தூபிகள் மற்றும் துறவி மடங்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில், பௌத்தர்கள் தங்கள் ஸ்தூபிகள் மற்றும் மடங்களை பெரும்பாலும் விவசாய பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத விதத்திலும் ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்களை சமாளிக்கும் விதத்திலும் மலை உச்சிகள் உட்பட்ட உயரமான இடங்களிலேயே அமைத்தார்கள்

மங்கியாலா என்பது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ளதொரு வட்ட வடிவ ஸ்தூபியாகும்.

1830 ஆம் ஆண்டில், மன்னர் ராஜா ரஞ்சித் சிங்கால் பணியமர்த்தப்பட்ட இத்தாலிய தளபதி ஜீன்-பாப்டிஸ்ட் வென்ச்சுரா (1792) மேற்பார்வையின் கீழ் ஐந்நூறு அகழ்வாராய்ச்சியாளர்களால் மங்கியாலா ஸ்தூபி கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அங்கு நாணயங்களையும் கண்டுபிடித்தனர்.

இதன் போது காந்தார புத்த கண்டுபிடிப்புகள் பற்றிய முதல் அறிவியல் வெளியீடு வெளியிடப்பட்டது. ஏபனசஹக் ஸ்தூபி இதன் போது பதிவாகிய முதல் புத்த நினைவுச்சின்னமாகும் (பவுட்ஸ் கே ஜோகிம் 2008: 44).

அத்தூபியின் கழுத்தைச் சுற்றி வரிசையாக கொரிந்திய பைலஸ்டர்கள் காணபப்டுவதுடன் கோபுரத்தின் முன் படிக்கட்டுகளுடன் இன்னுமொரு வட்ட ஸ்தூபியும் உள்ளது.

கந்தாரத்தில் உள்ள பழமையான புத்த ஸ்தூபி மற்றும் மடாலயம் தர்மராஜிகாவில் (கிமு 3 ஆம் நூற்றாண்டு) காணப்படுகிறது.

இவை தக்ஷிலா அருங்காட்சியகத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளவை. இப்புத்த ஸ்தூபி மற்றும் மடாலயம மௌரிய மன்னன் அசோகனால் கட்டப்பட்டது.

அவர் தீவிர பௌத்த பக்தராக இருந்ததால் ‘தர்மராஜா’ என்றும் அழைக்கப்பட்டார். தர்மராஜனானக திகழ்ந்து அவர் பௌத்த நம்பிக்கைக்கு ஒரு சிறந்த முன்மாதிரயாக இருந்தார். இந்த தூபி இந்தியாவில் உள்ள சாஞ்சியில் உள்ள ஸ்தூபியின் அதே வடிவத்திலேயே காணப்படுகின்றது.

பிரமாண்டமான எண்டா ஸ்தூபி மேலும் 15 மீட்டர் உயரம் கொண்டதுடன் அடித்தள விட்டம் 50 மீட்டர் ஆகும். நடை பாதை அல்லது பிரதக்ஷாண பாதை தரை மட்டத்திலிருந்து எழுப்பப்பட்டுள்ளது.

ஸ்தூபம் ஒரு உருளைத் தளத்துடன் வட்ட வடிவமானதாகும். அது அடிப்பபுகியில் செங்குத்தாக இருப்பதையும், மேற்கட்டுமானத்தின் செங்குத்திலும் அதே அமைப்புகள் இருப்பதையும் காணலாம் (ஜென்சன் 2008: 291).

கி.பி.520 ல் இப்பகுதிக்கு வந்த சுங் யூன் என்பவரும் தனது குறிப்புகளில் இது பற்றி எழுதியுள்ளார்.

இது 5, 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து வந்த புத்த யாத்ரீகர்களாலும் விவரிக்கப்பட்டுள்ளது.

இது பண்டைய உத்தியானாவின் தலைநகரான மிங்கோராவின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது.

முக்கிய ஸ்தூபியாளது மையத்தில் உயரமாக அமைந்துள்ளதுடன் ஏனைய சிறிய ஸ்தூபிகள், ஆலயங்ல்கள் மற்றும் நெடுவரிசைகளால் சூழப்பட்டுள்ளன.

பிரதான கட்டிடம் அதன் வடக்குப் பக்கத்திலும், குடியிருப்புப் பகுதி வடக்கு மற்றும் மேற்கிலும் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்தூபி கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை பல முறை புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள புத்காரா ஸ்தூபியின் பொதுவான தோற்றம்

 புத்காரில் மாலை தாங்குபவர்கள் (ஸ்வாட அருங்காட்சியகம்)

ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள நிமோகிராம் ஸ்தூபி மற்றும் மடாலயம் (கி.பி 1 முதல் 5 ஆம் நூற்றாண்டு) தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.

நிமோகிராம் ஸ்வாட் சமவெளியில் உள்ள ஷமோசாய் பள்ளத்தாக்கில், சைய்யது ஷெரீப்பிற்கு மேற்கே 45 கிமீ தொலைவிலும், ஸ்வாட் ஆற்றின் தென் கரையில் கார்கோட்டிலிருந்து 22 கிமீ தெற்கிலும் இத்தூபி அமைந்துள்ளது.

1966 ஆண்டளவிலேயே நிமோகிராம் கண்டுபிடிக்கப்பட்டது. இது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒரு வரிசையில் மூன்று முக்கிய ஸ்தூபிகளைக் கொண்டுள்ளது.

மேற்கில் பிரதான ஸ்தூபிக்கு அருகில் 56 ஸ்தூபிகள் மற்றும் ஒரு மடாலயம் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. நிமோகிராம் ஸ்தூபியின் சரியான வரலாறு பற்றிய தகவல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் அங்கு கிடைத்த காசுகள் குஷான் காலம் கி.பி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.

சித்தோ பார்த்தியன் யுகத்து நாணயங்கள் மற்றும் மட்பாண்டங்கள் தவிர, புத்த புராணங்களை சித்தரிக்கும் பல கற் சிற்பங்கள் மற்றும் ஸ்டக்கோ சிற்பங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கம்பத்துனா தளம் என்பது ஸ்வாட் ஆற்றின் தென் கரையில், பாரிகோட் கிராமத்திற்கு மேற்கே 6 கி.மீ தொலைவில், பாறைகள் நிறைந்த பரந்த பள்ளத்தாக்கில் நிமோகிராமிற்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ளதொரு பௌத்த கட்டிடமாகும்.

கீழ் மண்டலம் பிரதான ஸ்தூபியைக் கொண்டுள்ளதுடன் இது ஒரு ஸ்தூபி மற்றும் மூடிய சுவரால் எல்லையாக உள்ள நெடுவரிசைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதான ஸ்தூபி ஒரு செவ்வக கோபுரத்தில் அமைந்துள்ளதுடன் பெரிய ஸ்தூபி பண்டைய உத்தியானாவில் மிக சிறப்பாக பாதுகாக்கப்பட்ட ஸ்தூபியாக இருக்க வேண்டும்.

இது வட்ட வடிவமாவதுடன் 3 மேல் மற்றும் கீழ் மடல்களைக் கொண்டுள்ளது. ஸ்தூபியின் குவிமாடம் உருளை வடிவில் உள்ளதுடன் பன்னிரண்டு படிக்கட்டுகள் கொண்ட மேடையின் கிழக்கு முனையில் ஸ்தூபி கட்டப்பட்டுள்ளது.

கோபுரத்தின் அடிப்பகுதியை சுற்றிலும் கற்கள் கொண்ட ஒரு வட்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய ஸ்தூபிகளின் கொத்துனார் பணிகள் டயப்பர்களால் ஆனதாகும்.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள கம்பதுனா ஸ்தூபியின் பொதுவான தோற்றம்

டோகர்-தாரா (நாஜிகிராம்) பௌத்த தலமானது கர்கார் செல்லும் வழியில் பரிகோட்டில் இருந்து தெற்கே சுமார் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தளத்தில் ஒரு பெரிய ஸ்தூபி, தொடர்புடைய மடாலயம், ஒரு குடியிருப்பு, ஒரு சந்திப்பு மண்டபம் மற்றும் ஒரு நீரூற்று குகை ஆகியவை உள்ளன.

ஏனைய இரண்டு ஸ்தூபிகள் மோசமாக சேதமடைந்துள்ளதுடன் பல அடையாளம் தெரியாத ஸ்தூபிகளும் உள்ளன. இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய ஸ்தூபி சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது ஒரு அரைக்கோள கோபுரத்தை கொண்டுள்ளதுடன் ஒரு சதுர மேடை மீது கட்டப்பட்டுள்ளது.

முக்கிய ஸ்தூபியைச் சுற்றிலும் ஆதாரம் தாங்கிய ஸ்தூபிகள் சட்ட விரோத புதையல் தேடும் நபர்களால் சேதப்படுப்படடுள்ளன. இந்த ஸ்தூபியின் பகுதிகள் இடிபாடுகள் இப்போதும் காணக்கிடைக்கின்றன.

ஸ்தூபியை மேலிருந்து மையம் வரை சட்டவிரோதமாக தோண்டி தொல்பொருட்களைத் தேடுவதில் ஈடுபடும் நபர்கள் கட்டமைப்பு மற்றும் மேற்பரப்பு தொல்பொருள் சான்றுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

• மடாலயம்: மடத்தின் அமைப்பு சதுர வடிவில் உள்ளதுடன் வடக்கில் பிரதான ஸ்தூபிக்கு இரண்டு நுழைவாயில்களையும் தெற்கில் ஒரு சந்திப்பு மண்டபத்தின் நுழைவாயிலையும் கொண்டுள்ளது.

இங்கு ஆறு சதுர வடிவ அறைகள் உள்ளன. சில அறைகள் மூலம் மேலும் சிலவற்றின் கூரை பிரிக்கப்பட்டுள்ளன. சிலைகள் அல்லது விளக்குகளை வைப்பதற்கு ஒவ்வொரு அறையிலும் காற்றோட்ட வசதியுடன் சிறிய இiவெளிகள் தரப்பட்டுள்ளன.

• கூட்டம் கூடும் மண்டபம்: மடாலய முற்றத்தின் தென்மேற்கு முனையில் ஒரு பெரிய அரங்கம் உள்ளது. இது பௌத்தர்களின் சந்திப்பு இடமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தனித்தனியான அமைக்கப்பட்டுள்ள குடில்களில் மதிலின் இடிபாடுகள் முன்னால் பள்ளத்தாக்கின் சரிவில் அமைந்துள்ளது.

• குகை: கிழக்கு முனையில், தபஸ் சதுக்கத்திலிருந்து சுமார் 45 மீட்டர் உயரத்தில் நுழைவாயிலுடன் கூடிய குகை உள்ளது. இது பாதி உயரத்தில் ஒரு சுவரால் தடுக்கப்பட்டுள்ளது. இந்த குகையை துறவிகள் தியானத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம்.

• நீர்நிலை: நீர்நிலைகளை ஒட்டிய பகுதியில், வீட்டு உபயோகத்துக்கும், சுத்தப்படுத்துவதற்கும், பாசனத்துக்கும் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம். நீர்நிலைக்கு கீழே 1.82 மீட்டர் உயரமுள்ள மற்றொரு பாழடைந்த ஸ்தூபியின் இடிபாடுகள் உள்ளன.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள நஜிகிராம் ஸ்தூபியின் பொதுவான தோற்றம்

• பாணரில் உள்ள புத்த தளம் (கி.பி 1-5 ஆம் நூற்றாண்டு) களிமண் மலையின் ஓரத்தில் இரண்டு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இத்தளம் தெற்கு நோக்கிய படிக்கட்டுகளுடன் ஒரு முக்கிய ஸ்தூபியைக் கொண்டுள்ளது. பிரதான தாகெப ஸ்தூபிகளால் அது சூழப்பட்டுள்ளது.

• தளத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் ஒரு இத்தாலிய தொல்பொருள் மிஷன் மூலம் பாகிஸ்தான் அரசின் தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

அகழ்வாராய்ச்சியின் போது, குடில்கள், ஸ்டக்கோ சிற்பங்கள், மட்பாண்டங்கள் உட்பட ஏராளமான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஸ்வாட் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன

ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பானர் ஸ்தூபியின் பொதுவான தோற்றம்

பாரிகோட் கிராமத்திலிருந்து வடகிழக்கே சுமார் 3 கிமீ தொலைவில் மிங்கோராவிலிருந்து மர்தான் செல்லும் சாலையின் இடதுபுறத்தில் ஷpங்கர்தார் ஸ்தூபி அமைந்துள்ளது.

முதலில் ஸ்தூபியின் கோபுரம் சதுரமாக இருந்தது, ஆனால் கிராமவாசிகள் அஸ்திவாரக் கற்களை அகற்றி அதை தங்கள் வீடுகள் மற்றும் சாலைகளை அமைக்க பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு மேல் முகடு மற்றும் ஒரு கோள மேல் என ஸ்தூபம் இரண்டு கீழ் முகடுகளைக் கொண்டுள்ளது. ஸ்தூபியின் உச்சி முதல் தற்போதுள்ள தளம் வரையிலான மொத்த உயரம் 27 மீட்டர் ஆகும்.

கொத்தனார் வேளைகள் வெள்ளை கல் அடுக்குகளை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கருப்பு ஸ்லேட் துண்டுகள் சிறிய கீற்றுகளால் பிரிக்கப்படுகின்றன.

ஸ்தூபியின் அடிவாரத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கே சுமார் 15 மீற்றர் தொலைவில் பௌத்த மதத்தை ஏற்றவர்களுக்கான குடியேற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன, மேலும் இப்பகுதிகளில் இன்று நவீன வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஷிங்கார்தர் ஸ்தூபியின் பொதுவான தோற்றம்

தக்தே பாஹி ஸ்தூபி கைபர் பக்துன்க்வாவின் மர்தான் மாவட்டத்தில் ஒரு உயரமான வெளியிவல் அமைந்துள்ளது. அது கிபி 1 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மலை உச்சியில் கண்கவர் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த புத்த மடாலயம் கிபி 7 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது.

இது ஒரு கட்டிடத் தொகுதியைக் கொண்டுள்ளதுடன் பாகிஸ்தானின் மிகவும் முழுமையான புத்த மடாலயம் இதுவாகும். இது சுண்ணாம்பு மற்றும் மண் கலவையைப் பயன்படுத்தி செய்யப்பட்டதுடன் கல் தொகுதிகளைப் பயன்படுத்தி காந்தார வடிவங்களைக் கொண்டு அப்பகுதி கட்டப்பட்டது.

தற்போதைய இடிபாடுகள் ஒரு முக்கிய ஸ்தூபி முற்றம், நேர்ச்சை ஒப்பகைகும் ஸ்தூபிகளின் முற்றம், மூன்று ஸ்தூபிகளின் தொகுதி, தியான அறைகள் கொண்ட ஒரு சதுர வடிவ மடம், ஒரு மாநாட்டு மண்டபம், மூடப்பட்ட படிக்கட்டுகள் மற்றும் ஏனைய சில கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

ஆய்வாளர் பெலோ 1864 ஆண்டில் தளத்தின் ஆரம்ப நுழைவாயில்களைப் பற்றி தயது குறிப்புக்களில் குறிப்பிட்டுள்ளார்;. அவர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உடைந்த மண் பானைகளை இங்கு கண்டுபிடித்தார்.

பின்னர், ஆய்வாளர் ஸ்பூனர் 1909 இல் தனது அகழ்வாராய்ச்சியின் போது மேற்கு சுவரில் ஒரு சாளரத்தில் காணப்பட்ட நிலத்தடி கட்டமைப்புகள் பற்றிய தனது கருத்துக்களை எழுதினார்.

அகழ்வாராய்ச்சியில் கணிசமான எண்ணிக்கையிலான ஸ்தூபிகள், சிலைகள், புத்தர் சிலைகள், போதிசத்வா சிலைகள், வழிபாட்டு பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன (ஹாக்ரீவீஸ் 1910 11: 33-39).

பெஷாவர் பள்ளத்தாக்கில் உள்ள தக்தே பாஹி ஸ்தூபியின் பொதுவான தோற்றம்

போதிஸத்வ (பேஷாவர் நூதனசாலை)

தக்ஷலாவிற்கு மேலே 100 மீட்டர் உயரத்தில் ஒரு மலையிலேயே ஜூலியன் அமைந்துள்ளது.

இந்த மடாலயத்தின் அறைகள் காந்தாரத்தின் ஏனைய மடங்களைப் போலவே, தாழ்வாரங்களுடன் ஒரு சதுர வடிவ மத்திய முற்றத்தால் சூழப்பட்டுள்ளன.

மடாலயம் ஒரு குளியலறை, ஒரு சந்திப்பு அறை, ஒரு களஞ்சிய சாலை, ஒரு சமையலறை மற்றும் ஒரு கழிப்பறை ஆகியவற்றை கெண்டுள்ளது.

ஆனால் இங்கு ஒரு கிணறு இருந்ததற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை இல்லை. பிரதான ஸ்தூபி மோசமாக சேதமடைந்துள்ளதுடன் அது 21 ஸ்தூபிகளால் சூழப்பட்டுள்ளது.

போதிஸத்வ (ஹந்த் நூதனசாலை)

ஆரம்பத்தில் இந்த ஸ்தூபிகள் கிரேக்க கலை நுட்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன பிறகு இரண்டாம் ஆம் நூற்றாண்டில், புத்த மத கைவினைஞர்களால் செதுக்கப்பட்ட வடிவமைப்புகள் மூலம் இதை மாற்றம் பெற்றன. புத்தபெருமானின் பல போதனைகள் இங்கு உள்ளன.

வெள்ளை ஹூன் படையெடுப்பின் போது அபகரிக்கப்பட்ட மடாலயம் அவர்களின் வீழ்ச்சிக்குப் பின் மீட்டெடுக்கப்பட்டது.

தக்ஷிலா பள்ளத்தாக்கில் உள்ள ஜுலியன் புத்காரா ஸ்தூபியின் பொதுவான தோற்றம்


புத்த சிலைகள்

ஜுலியனின் பாரசீக வடிவங்கள்

தனித்துவமான பாமாலாவின் பிரதான ஸ்தூபியின் உச்சியில் ஒரு பெரிய சதுர அடித்தளம் உள்ளது. அதன் முனைகள் நான்கு திசைகளிலும் தெரியும்.

இப்பகுதி ஒரு காலத்தில் புத்த நாகரிகத்தின் முக்கிய மையமாக இருந்ததுடன் கலை மற்றும் கட்டிடக்கலையின் தொல்பொருள் பாரம்பரியத்தை உலகிற்கு விட்டுச் சென்றுள்ளது.

இது புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட குறுக்கு வடிவ ஸ்தூபியைக் கொண்டுள்ளதுடன் உலகில் இதுபோன்ற சில இடங்கள் மட்டுமே உள்ளன.

மேலும், இங்குள்ள பெரிய பரிநிர்வாண சிலை 14 மீட்டர் நீளம் கொண்டது, இது மகத்தான காந்தார நாகரிக வரலாற்றில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சிலை ஆகும்.

தஷிலா பள்ளத்தாக்கில் உள்ள பாமலா ஸ்தூபியின் பொதுவான தோற்றம்

ஜினான் வாலி தேரி (தீய ஆவிகளின் குழு) என்பது பாகிஸ்தானின் தக்ஷpலாவிற்கு அருகில் உள்ள ஒரு தொல்பொருள் தளமாகும்.

இங்கு காணப்படும் 5 ஆம் நூற்றாண்டு பௌத்த ஆசிரமத்தின் இடிபாடுக்ள காந்தார நாகரீத்தின் ஒரு அம்சமாகும்.

இது பொரும்பாலும் மிகவும் அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஒரு இடமாகும். ஒரு ஸ்தூபி, பிரதான பெகோடாவை எதிர்கொள்ளும் கோவில்களின் மறைப்பு, கிழக்கு சுவரின் இருபுறமும் உள்ள கோவில்களுக்கு முன்னால் இரண்டு தளங்கள், மற்றும் மேல் பெவிலியனில் ஒரு முற்றம் ஆகியவை இருப்பதுடன் அவற்றில் பிரதான ஸ்தூபிக்கு செல்லும் தாழ்வாரத்தின் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை புத்தர் சிலைகள் மற்றும் யாத்ரீகர்களை சித்தரிக்கும் சுவரோவியங்கள ஆகும். அவற்றில் பல பல ஆண்டுகளாக படிப்படியாக சிதைவிற்கு உட்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் சில பகுதிகள் நல்ல நிலையில் உள்ளன.

5 ஆம் நூற்றாண்டில் வெள்ளை ஹன்கள் இப்பகுதியை ஆக்கிறமித்த இந்த ஓவியங்களும் அழிக்கப்பட்டன. இந்த வளாகம் 2010 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. குஷான் வம்சத்தின் நாணயங்கள், வெள்ளை ஹன்களின் வெள்ளி நாணயங்கள், மட்பாண்டங்கள், நகைகள் மற்றும் ஏனைய பொருட்கள் ஸ்தூபியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களில் அடங்கும்.

இத்தொல்பொருட்கள் தஷிலா நூதனசாலையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. (கான் மற்றும் ஹசன் 2008)

தக்ஷிலா பள்ளத்தாக்கில் உள்ள ஜினானா வலி தேரி ஸ்தூபியின் பொதுவான தோற்றம்

தக்ஷிலா அருங்காட்சியகத்திலிருந்து வடமேற்கே 9 கிமீ தொலைவிலும், ஜூலியன் கிராமத்திற்கு வடமேற்கே 2 கிமீ தொலைவிலும் பாதல்பூர் புத்த மடாலயம் (தக்ஷிலா பள்ளத்தாக்கு) உள்ளது.

1864 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் இந்த முக்கியமான புத்த மடாலயத்திற்கு வருகை தந்தார்.

2005-2009 காலகட்டத்தில், மத்திய தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகங்கள் மூலம் முஹம்மது அஷ்ரப் கான், ஆரிப் மற்றும் ஷாகிர் அலி நியமிக்கப்பட்டு அந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

அப்போதைய அகழ்வாராய்ச்சியின் போது ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்தன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு, சிவப்பு மணற்கற்களால் உருவாக்கப்பட்ட புத்த பிரானின் மதுரா சிலையாகும்.

புத்தர் சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை சிற்பம் சித்தரிக்கிறது. புத்தரின் பாதத்தின் அடியில் தர்ம சக்கரத்தின் சின்னங்கள் உள்ளன. வலது கையில் அபய முத்திரை மற்றும் உள்ளங்கையில் தர்ம சக்கரங்கள் உள்ளன. சிலையின் பின்புறத்தில் ஒரு பயிபல் மரம் செதுக்கப்பட்டுள்ளது.

தக்ஹிலா பள்ளத்தாக்கில் உள்ள பாரா தேரி தளத்தில் மதுரா பாணி புத்தர் சிலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தனித்துவமான கண்டுபிடிப்பபுகளின் காரணமாக, மதுராவின் புத்தர் சிலைகள் இந்த இடங்களிலிருந்து தோன்றியவை என்பதும் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் யாத்திரையின் போது சில பக்தர்கள் அல்லது துறவிகளால் இந்த மடங்களுக்கு வழங்கப்பட்டன என்பது தெளிவாகிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு மைத்ரேய போதிசத்வாவின் சிலை ஆகும், மேலும் மடத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஸ்தூபி வடிவ நினைவுச்சின்னம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. (கான் மற்றும் குழு 2013)

பட்டுப் பாதை ஊடாக பௌத்த சிற்பக் கலை

இந்த தனித்துவமான கல்வெட்டுகள் இந்தோ-கோஹிஸ்தான் முதல் போல்டிஸ்தான் வரை, லடாக் மற்றும் டிகேட்டா வரை நீண்டுள்ளன. பாறை கலைப்பொருட்கள் சிந்துவிற்கு அப்பால் கில்கிட், யாசின் மற்றும் ஹன்சா பள்ளத்தாக்குகள் போன்ற அதன் துணை நதிகள் வரை பரவியுள்ளன.

பாறைக் கலை மண்டப வளாகம் இந்தோ-கோஹிஸ்தானில் உள்ள ஷhதியால்; மற்றும் ராய்கோட் பாலத்திற்கு இடையே அமைந்துள்ளது.

இப்பகுதியில் 50,000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும், 5,000 க்கும் மேற்பட்ட கற்பலகைளும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் புதிய கற்காலம் (கிமு 7 முதல் 6 வரை) முதல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில், அதாவது இது இஸ்லாத்தின் வருகையுடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

காரகோரம் நெடுஞ்சாலை அல்லது ஷாதியாலில் இருந்து குஞ்சராப் கனவாய் வரையிலான பட்டுப் பாதையில் பௌத்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.பி முதல் நூற்றாண்டில்தான் புத்த மதம் இந்த இடத்திற்கு வந்தது. புத்த மதத்தின் வருகை அப்பகுதியின் பாறைக் கலையில் தாக்கம் செலுத்தியது எனலாம். இந்த கற்சிற்பங்கள் புத்தர், போதிசத்துவர், ஜாதகா மற்றும் ஸ்தூபியின் முக்கிய செதுக்கல்களைக் கொண்டிருந்தன. அவற்றில் ஸ்தூபிகள் மிகவும் பொதுவானவை.

மனிதனால் உருவாக்கப்பட்ட இக்குறிப்பான்களின் பல்மாணிக்கம் படிவுகள் காணப்பட்டன. இச்சிற்பங்கள் அக்கால பௌத்த கலைஞர்களின் திறமையை பிரதிபலிக்கின்றன.

பௌத்த கல்வெட்டுகளில் பல்வேறு சிற்ப மற்றும் கட்டிடக்கலை நுட்பங்ககளின் வளர்ச்சியையும் இது காட்டுகிறது. காரகோரம் சிற்பங்கள் முக்கியமாக புத்த மதத்தின் ஸ்தூபி கட்டிடக்கலை மற்றும் புத்தரின் பெரும்பாலான படங்களை சித்தரிக்கின்றன.

விதானை மற்றும் பாணியின் அடிப்படையில், இந்த புத்தர் சிலைகளை காந்தாரப் பகுதியில் காணப்படும் புத்தரின் பழமையான மனித சித்தரிப்புகளுடன் ஒப்பிடலாம். காந்தாராவிற்கும் சின்ஜியாங்கில் சீன பௌத்தத்தின் எழுச்சிக்கும் இடையே உள்ள ‘மறைந்து வரும் தொடர்பை’ இது சுட்டிக்காட்டுகிறது (மிலாட் மற்றும் கெரா கெசார்ட் 1994)

ஜனாபாத் கிராமத்தின் தென்மேற்கே சரிவில், சிவப்பு நிற உயரமான பாறை முகத்தில் செதுக்கப்பட்ட தியானம் செய்யும் புத்தரின் பெரிய உருவம் ஒன்று உள்ளது.

இது மங்க்ளாவீருக்கு வடகிழக்கே 5 கி.மீ. இங்குள்ள நத்தைகளின் முட்கள் போன்ற சுருள் கூந்தலைப் போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்படும் புத்தரின் கண்கள் பாதி மூடியிருக்கும். அத்துடன் நீண்ட காது மடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இறுதிக் கணிப்பு

காந்தாரம் பௌத்த மதத்திற்கும், பிரச்சாரத்திற்கும் புகழ்பெற்ற பிரதேசமாகும். இப்பராந்தியத்தில் பௌத்த மதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏராளமான ஸ்தூபிகள் மற்றும் மடாலயங்கள் உள்ளன.

காந்தாரம் வௌ;வேறு வம்சங்களால் ஆளப்பட்டதால், அதன் கலை மற்றும் கட்டிடக்கலை பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டது.

மௌரிய மன்னன் காந்தாரப் பகுதியில் முதல் ஸ்தூபியைக் கட்டினான். பொதுவாக, மன்னர் அசோகர் என்ற பெயர் புத்த மதத்தின் பரவலுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது.

பட்டுப்பாதை ஒரு முக்கியமான பாதையாகவும், வர்த்தக ஆதாரமாகவும் கருதப்படுகின்றது. மேலும் புத்த மதத்தை பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.

கில்கிட் போல்டிஸ்தானின் பாறைக் கலை, பௌத்த யாத்ரீகர்கள் தங்கள் மதத்தை வழிபடுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் வழியில் உள்ள பெரிய கற்களில் பௌத்தம் தொடர்பான ஓவியங்கள் மற்றும் சிலைகளை உருவாக்கத் தூண்டப்பட்டதை இது உறுதி செய்கின்றது.

காந்தார கலை என்பது மத மற்றும் மதச்சார்பற்ற பரிமாணங்களின் கலவையாகும். இது முதன்மையாக பௌத்தத்தைப் பற்றியது என்ற போதிலும் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் பல கலாச்சார கூறுகளையும் இங்கு காணலாம்.

மேலும் இவற்றில் மது அருந்துதல், நடனம் மற்றும் உலகாயுத மற்றும் மேற்கத்திய சுவைகள் ஆகியவையும் சிறுங்காரமும் இவ்வாக்க்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், அகாந்தஸ் இலைகள், கொடிக் கவிதைகள், கட்டிடக்கலை வடிவங்கள் மற்றும் கொரிந்திய செவ்வக நெடுவரிசைகள் போன்ற பல அலங்கரிக்கப்பட்ட வடிவமைப்புகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

கிரேக்க மற்றும் ரோமானிய கடவுள்களின் உருவங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

காந்தார பௌத்த கலையில் இந்திய மற்றும் பாரசீக கலாச்சார தாக்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன என்பதையே இது இது காட்டுகின்றது.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி நிலை என்ன? பதற்றத்தில் உலக நாடுகள்:

 ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில்,...

புத்தளத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவு: சமூக நல பணியாளர்கள் களத்தில்

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளத்தில் பல...

ஹெலிகாப்டர் விபத்து: ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்களை காணவில்லை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச...

சீரற்ற காலநிலை: புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்குப் பூட்டு!

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக...