பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்: வேன் கட்டணங்கள் அதிகரிப்பு!

Date:

இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி கடந்த மாதம் 19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கி தனியார் பேருந்துகள் இயக்குவதில்லை என தீர்மானித்தமையால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை வேன் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...