போதைமாத்திரைகளுடன் கைதான போலிஸ் அதிகாரி!

Date:

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விடுதி ஒன்றின் அருகில் போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வரும் 25 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து சுமார் 450 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொலிஸ் அதிகாரியை விசேட பொலிஸ் அதிரடி படையினர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...