மகிந்த ராஜபக்ஷ கறுப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றம் வந்தார்!

Date:

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் தனது கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.

அதேநேரம், ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்புப் பட்டியை அணிந்தவாரே இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் அனுதாப பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இதன்படி அவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தனர்.

இதன்போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, யுத்தக்காலத்தில் 30 வருடங்களாக மக்கள் மரண பயத்துடனேயே வீதிகளில் சென்றனர்.

2019 மே 19 ஆம் திகதிக்கு பின்னர் அந்த அச்சம் இல்லாது செய்யப்பட்ட போதும், தற்போது எம்.பிக்கள் மரண அச்சத்துடன் செல்லும் நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னால் திட்டமிட்டு செயற்படும் சிலர் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...