முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு குழந்தைகளை அனுமதிப்பது தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய  2023 ஆம் ஆண்டு முதல் குறித்த சுற்றறிக்கையானது அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...