மே 9 வன்முறைச் சம்பவத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்: தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள ‘மைனா கோ கம’ ஆகிய இரண்டு அமைதியான போராட்டத் தளங்களில் ‘அரச அனுசரணையுடன் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு இன்றுடன் (ஜுன் 9) ஒரு மாதத்தைக் குறிக்கிறது.

அதற்கமைய இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ, தேஷபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இரவு 8 மணிக்குள் கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டார், மேலும் அவர்; தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...