அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Date:

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்தது.

மூன்று நாள் பயணமாக இக்குழுவினர் நேற்று காலை இலங்கை வந்தடைந்தனர்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், ஆசியாவுக்கான பிரதி உதவித் திறைசேரிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலாளரான தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது, இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கை ஒரு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவுவதற்கு நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்டகால பங்காளித்துவத்தை வழங்குகிறோம்’ என்று ஜூலி சுங் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் குழுவினர் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...