அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படும் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தின்படி, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கப் பதவியை ஏற்றுக்கொண்டால், அவர் சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார் என மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.