இந்தியாவினால் இரண்டாவது நிவாரண உதவி தொகை அரசாங்கத்திடம் கையளிப்பு!

Date:

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 14,700 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் பவுடர் மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கிய 3 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்களை  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று இலங்கைக்கு கையளித்தார்.

தமிழ்நாடு அரசின் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் மருந்துகள் என்ற பெரிய உறுதிப்பாட்டின் கீழ் இது இரண்டாவது பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றதாக என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதாரம் தொடர்பான பல நிறுவனங்களுக்கு மருந்துகள் வழங்குதல், இலங்கை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம், தேவைப்படும் பிரிவினருக்கு உலர் உணவுகள் வழங்குதல் போன்ற வடிவங்களில் இந்திய அரசு இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த நிவாரணப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இந்த நிவாரண உதவி பொருட்களின் பொறுமதி மூன்று பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...