இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூன் 6 முதல் 12 வரையிலான மின்வெட்டு அட்டவணையை அங்கீகரித்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, ஜூன் 6-ஆம் திகதி முதல் 10-ஆம் திகதி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும், ஜூன் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை இன்று (5) மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாளை முதல் ஜூன் 12 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.