ஷியா முஸ்லிமான யாசர் அல் ஹபீப்பின் கதையை அடிப்படையாகக் கொண்ட The Lady of Heaven என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மொராக்கோ உட்பட பல முஸ்லிம் நாடுகள் அந்நாடுகளில் திரையிடுவதை தடை செய்துள்ளன.
‘சரித்திர உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன’ என்பதே மேற்படி நாடுகள் இதற்காக முன்வைத்துள்ள காரணமாகும்.
இது தவிர இத்திரைப்படத்தில் நபி முகம்மத் அன்னவர்கள் ஒரு நடிகரால் சித்தரிக்கப்படுவதும் இந்த தடைக்கு மற்றொரு காரணமாகும்.
இறை தூதர் முஹம்மத் அன்னவர்களை சித்திரங்களில் அல்லது திரைப்படங்களில் சித்தரிப்பதை முஸ்லிம் உலகம் கடுமையாக எதிர்க்கின்றது.
ஏனெனில் தனது உருவத்தை வரைவதையோ செதுக்குவதையோ நபிகள் அவர்கள் அன்னாருடைய வாழ்நாளில் கண்டிப்பாக தடுத்து வந்துள்ளார்கள்.
நபியவர்களின் அருமை மகள் ஃபாத்திமா சஹ்ரா சித்தரிக்கப்பட்டுள்ள மேற்படி ஆங்கிலத் திரைப்படம், பிரிட்டனில் வாழும் முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக பிரிட்டனிலும் திரையிடுவது தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷியா முஸ்லிம்கள் பொதுவாக அன்னை ஆயிஷா உட்பட நபியவர்களின் மனைவியர்களையும் ஆயிஷாவின் தந்தை அபூபக்கர் மற்றும் உமர் போன்றோரையும் மோசமாகவே விமர்சிப்பதுண்டு.