கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா இன்று!

Date:

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை 4 மணிமுதல் மும்மொழிகளிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு, இன்று மாலை 5 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனியுடன் இன்றைய தினம் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் நேரம் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அதிகாலை 4.00 மணிக்கு தமிழ் மொழி, 5.00 மணிக்கு சிங்கள மொழி, 6.00 மணிக்கு தமிழ் மொழி, 7.00 மணிக்கு சிங்கள மொழி, 8.00 மணிக்கு தமிழ் மொழி, 10.00 மணிக்கு சிங்கள மொழி, நண்பகல் 12.00 மணிக்கு ஆங்கில மொழி இடம்பெறும்.

மேலும், மாலை 5.00 மணிக்கு புனிதரின் திருச்சுரூப பவனி இடம்பெற்று இரவு 8.00 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சுரூப ஆசீர்வாதம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...