பாகிஸ்தானுக்கும் இலங்கை ரக்பிக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது
இதன்போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தூதுவர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இலங்கை ரக்பி வரலாற்றில் முதல் தடவையாக மாகாண ரக்பிக்கு அனுசரணை வழங்கினார்.
இலங்கை ரக்பி சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய பாகிஸ்தான் தூதரக அனுசரணையில் மாகாண மட்டத்தில் உள்ள சகல ரக்பி விளையாட்டு சங்கங்கள் வீரர்களையும் இத்துறையில் ஈர்ப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் மாகாண மட்டத்தில் ரக்பி விளையாட்டுப் போட்டியினை நடாத்துவதற்கும் என திங்கட்கிழமை கொழும்பு ரமடா ஹோட்டலில் ஒப்பந்தம் ஒன்று பாகிஸ்தான் தூதுவர் மற்றும் இலங்கை ரக்பி சங்க தலைவருக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
இந் நிகழ்வில் பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்க்கி , இலங்கை ரக்பி சங்க தலைவர் றிஸ்லி இல்யாஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அத்துடன் அனுசரணையாளர் வெளியீடும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதி தூதுவர் தன்வீர் அஹமட், பாகிஸ்தான் தூதரக முதலாவது செயலாளர் திருமதி ஆயிசா அபுபக்கர், ரக்பி சங்கத்தின் பணிப்பாளர் ஹம்சா ஹிதாயத்துல்லா மற்றும் பிரதி தலைவர் றியர் அட்மிரல் உதய ஹெட்டியாராச்சியும் கலந்து கொண்டர்.
இது பாகிஸ்தான்-இலங்கை இளைஞர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கான மற்றொரு படியாகும்.