பழம்பெரும் சிங்கள நடிகையான சுமனா அமரசிங்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 74.
சில காலமாக சுகவீனமுற்றிருந்த அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சுமனா அமரசிங்க இந்நாட்டில் சினிமா மற்றும் நாடகத்துறையில் முன்னணி நடிகை. அதுமட்டுமில்லாதது தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் தெனி பிட்டிய விதானகே சுமண அமரசிங்க, ரூபி டி, மெல் இயக்கிய ‘பிபென குமுது என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அவர் இலங்கையின் மூத்த நடிகரும் திரைப்பட இயக்குநருமான ராய் டி சில்வாவை மணந்தார்.