உணவு நெருக்கடியை எதிர்கொள்ள இன்று முதல் பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துங்கள்: ரம்ய லங்கா!

Date:

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ளும் வகையில் அரசாங்கமும் ஏனைய சமூகத் தலைமை அமைப்புகளும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை (Home Gardening) மற்றும் சிறியளவிலான வீட்டுக் கைத்தொழில் (Cottage Industry) போன்ற திட்டங்களை செயல்படுத்துமாறு பணித்திருப்பதோடு, அவற்றுக்கான வழிகாட்டல்களையும் மக்களுக்கு வழங்கி வருகின்றன.

அந்த வகையிலேயே  கொழும்பு போன்ற நகரப் பகுதிகளிலும், அக்குரனையை ஒத்த தன்மை கொண்ட பிரதேசங்களிலும், கிழக்கு மாகாணத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வீட்டுத்தோட்டச் செய்கையை சிறப்பாக முன்னெடுப்பதற்காக அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற ஆளுமைகளின் அனுபவங்களையும் நடைமுறைச் சாத்தியமான வழிகாட்டல்களையும் உதல்லு சவிய வீட்டுத்தோட்டப் பயிர்செய்கைத் திட்டத்தின் மூலம் ரம்ய லங்கா (Ramya Lanka) உங்களுக்கு வழங்குகின்றது.

ஒவ்வொருவரும் தத்தமது உணவுத் தேவையை தாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு தமது வீட்டுத் தோட்டங்களையும் எனைய நிலங்களையும் உச்சகட்டமாகப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் இத்திட்டம் அமுலாகி வருகின்றது.

இதனடிப்படையில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் சிறியளவிலான வீட்டுக் கைத்தொழில் தொடர்பான மக்களுக்கு தேவயானை வழிகாட்டல்களை zoom தொழிநுட்பத்தியத்தின் ஊடாக வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தவகையில் 12/06/2022 திகதி (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : இரவு 8.15 முதல் 9.45 வரை

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87214127712?pwd=SGFPQS9BSDJVcDNUU1FsVmVSbUdpZz09

Meeting ID: 872 1412 7712
Passcode: 459644

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...