எரிபொருள் நிலையங்களில் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு குறைந்தபட்ச அதிகாரம்!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே கட்டுக்கடங்காத வன்முறைகளை கட்டுப்படுத்தும் அதே வேளையில் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு இலங்கை பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதற்கமைய எரிபொருள நிலையங்களில் நேற்று (ஜூன் 18) இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு விஸ்வமடுவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெறுகின்றனர்.

அதுருகிரிய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அதிருப்தியடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத வகையில் பொலிசார் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் எரிபொருள் குறிப்பாக பெற்றோல்இ சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...