லிட்ரோவின் முன்னாள் முகாமையாளர்கள் 3900 மெற்றிக் தொன் தரையிறங்கும் கப்பலைத் தவிர வேறு எந்த எரிவாயு தாங்கிகளையும் ஆர்டர் செய்யாமல் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ் இன்று (15) தெரிவித்தார்.
அதேநேரம், தரையிறங்குவது அல்லது பணம் செலுத்துவது தொடர்பாக குறைந்தபட்சம் பல சப்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
3900 மெற்றிக் தொன் எரிவாயு என்பது மிகச் சிறிய தொகை என்றும், அந்த தொகையால் இந்த பாரிய எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்பதை வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை இறக்குமதி செய்யப்பட்டுள்ள எரிபொருளை ஏற்றிய நான்கு கப்பல்களுக்கு 180 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், அந்த கப்பல்கள் கடந்த சில தினங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு கப்பல்களில் 40 ஆயிரம் மெற்றி தொன்னுக்கு மேற்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் இருப்பதாகவும் அந்த கப்பல்களில் உள்ள எரிபொருளை எப்படியாவது பெற்றுக்கொள்வதற்காக எரிசக்தி அமைச்சு,
எனினும் கப்பல்களில் இருக்கும் எரிபொருளை இறக்குவதற்காக இதுவரை டொலர்களை ஒதுக்காத காரணத்தினால், இந்த இரண்டு கப்பல்கள் நான்கு நாட்களுக்கு மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.