ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? :கைது செய்வதை தடுக்குமாறு கோரி மனு!

Date:

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி காலி முகத்திடலில் அமைந்துள்ள மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபராக சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாம் பெயரிடப்பட்டதாக மனுதாரர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைச் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யத் தயாராகி வருவதாகவும், இது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் கூறுகிறார்.

எனவே தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தகவல் கிடைத்த பல இடங்களில் விசேட பொலிஸ் குழுக்கள் சோதனை நடத்திய போதிலும் இதுவரை சந்தேக நபரை கைது செய்ய முடியவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...